கோவையில் தவிக்கும் இலங்கை பெண்


கோவையில் தவிக்கும் இலங்கை பெண்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா விசாவில் வந்து காலம் கடந்ததால் இலங்கையை சேர்ந்த பெண் கோவையில் தவிக்கும் நிலை உள்ளது. சொந்த நாட்டுக்கு செல்ல உதவ கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார்.

கோயம்புத்தூர்


சுற்றுலா விசாவில் வந்து காலம் கடந்ததால் இலங்கையை சேர்ந்த பெண் கோவையில் தவிக்கும் நிலை உள்ளது. சொந்த நாட்டுக்கு செல்ல உதவ கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார்.

இலங்கை பெண்

இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் நாகையா. இவருடைய மனைவி வானதி (வயது 39). இவர்களுக்கு ஜெனித் (19) என்ற மகனும், கீர்த்தனா (17) என்ற மகளும் உள்ளனர். கொரோனா காலமான கடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் தமிழகம் வந்தார். பின்னர் புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதியில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கினார்.

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் கோவையில் தடாகம் ரோடு டி.வி.எஸ். நகரில் உள்ள தோழி ஒருவர் வீட்டிற்கு வந்து தங்கினார். அங்கு இருந்து கொண்டே தனியாக வசிக்கும் குழந்தைகளை பார்க்க சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சித்தார். அப்போது சிலர் சொந்த நாட்டிற்கு செல்ல ரூ.5 ஆயிரம் பணம் செலவாகும் என கூறி உள்ளனர். இதனையடுத்து வானதி நகைகளை விற்று அவர்களிடம் பணத்தை கொடுத்து உள்ளார். ஆனால் அவர்கள் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

கலெக்டரிடம் மனு

இந்தநிலையில் வானதி தான் சொந்த நாட்டுக்கு செல்ல தேவையான உதவிகளை செய்து தரக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்தார். பின்னர்அவர் அங்குள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மைய அதிகாரி மகேசை சந்தித்தார். அப்போது அவர், நீங்கள் சுற்றுலா விசாவில் வந்து உள்ளீர்கள். நாங்கள் அகதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவே எங்களால் முடியும். தற்போது எங்களால் உதவ முடியாது என்று கூறிவிட்டனர்.

தவிப்பு

இதனால் கண்ணீருடன் வானதி கூறியதாவது:- கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நான் எனது சொந்த நாட்டிற்கு செல்ல முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அது நடக்கவில்லை. பாஸ்போர்ட் அலுவலகம் சென்று விசாரித்த போது சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தினால் தான் செல்ல முடியும் என்று கூறிவிட்டனர். அவ்வளவு தொகையை செலுத்த என்னிடம் வழியில்லை. சிலரிடம் உதவி கேட்டு உள்ளேன். அவர்கள் உதவி செய்வதாக கூறி உள்ளனர். இலங்கையில் தனியாக தவிக்கும் எனது குழந்தைகளை பார்க்க அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story