ஸ்ரீமுஷ்ணம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீமுஷ்ணம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம் கொம்பாடி தெருவில் புதிதாக ஞான விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 25-ந்தேதி அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனலட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், காப்பு கட்டுதல், பிரவேசபலி, முதல் காலயாக பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று காலையில் கோ பூஜை, சூரிய பூஜை, 2-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜை நடந்தது.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடா்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான கொம்பாடி தெருவாசிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story