சாக்லெட் கொடுத்து மகிழ்ந்த ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள்


சாக்லெட் கொடுத்து மகிழ்ந்த ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள்
x

பிறந்தநாளையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் சாக்லெட் கொடுத்து மகிழ்ந்தது

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் யானை ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் யானை ஆண்டாளுக்கு நேற்று 44-வது பிறந்தநாள் ஆகும். இதனால் காலையில் குளித்து புத்தாடை அணிந்து, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பக்தர்களுக்கு கூடையில் சாக்லெட்டை தூக்கிக்கொண்டு வந்து கொடுத்தது. இதைப்பார்த்து பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் உற்சாகத்துடன் கூடையில் இருந்து சாக்லெட்டை எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இணை ஆணையரும், பக்தர்களும் யானைக்கு பழங்களை வழங்கினர். கடந்த 28.02.1979-ம் ஆண்டு பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த ஆண்டாளை திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்தார். அவர் பின்பு ஆண்டாளை காரமடை அரங்கநாத சுவாமி கோவிலுக்கு தானமாக வழங்கினார். காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும். பின்பு ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வேண்டும் என்று முறைப்படி எழுதி வாங்கி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கினார். ஆண்டாள் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு 17.10.1986 அன்று தன் முதல் சேவையை ஆரம்பித்தது. பெருமாளுக்கான தன் முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் எடுக்கும் பாக்கியத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story