சர்வதேச யோகா போட்டிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி தேர்வு


சர்வதேச யோகா போட்டிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி தேர்வு
x

சர்வதேச யோகா போட்டிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் குடியரசு. இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ஜெயவர்தனி. இவர் பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயது பிரிவில் மாணவி ஜெயவர்தனி கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் நிதியுதவியில் யோகா பயிற்றுனர் தேர்வுக்கு தயாராகி வருகிறார். தேசிய யோகா சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் மாணவி ஜெயவர்தனி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தாய்லாந்து நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பழனியில் நடந்த தேசிய யோகா போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து கம்போடியா நாட்டில் மே 27-ந் தேதி நடைபெறும் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க மாணவி ஜெயவர்தனி தேர்வாகி உள்ளார். சாதனை படைத்த மாணவியை ஆசிரியர்கள், பெற்றோர், முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.


Next Story