கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யு.வினர் ஆர்ப்பாட்டம்


கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x

கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் நல்வீரப்பன் முன்னிலை வகித்தார். இதில் துணை செயலாளர்கள் சுந்தர், ராஜசேகர், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளை தலைவர் முத்தையா நன்றி கூறினார்.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில் கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும். டெல்லி-நேபாள் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி.க்கு விற்றதை வாபஸ் வாங்க வேண்டும். சுற்றுலா ரெயில்கள் உள்ளிட்ட 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ேடாம் என்றனர்.


Next Story