தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி


தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி

கடலூர்

கடலூர்

கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மகள் ஆதிலட்சுமி. இவர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு எழுதி வந்தார். கணித தேர்வு எழுதுவதற்கு முன்பு, அவரது தந்தை ரவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இருப்பினும் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் இருந்த ஆதிலட்சுமியிடம் அவரது உறவினர்கள், ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து, கணித பாட தேர்வை எழுத வலியுறுத்தினர். அதன்பேரில் மாணவி ஆதிலட்சுமி கணித தேர்வை எழுதினார். இந்நிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியான நிலையில், ஆதிலட்சுமி 271 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கணித பாடத்தில் 60 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தேர்ச்சி பெற்ற மாணவியை ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் பாராட்டினர். இது பற்றி மாணவி ஆதிலட்சுமி கூறும் போது, தனது தந்தையின் கனவை நிறைவேற்ற நர்சிங் படிப்பேன் என்றார்.


Next Story