எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் சார்பில் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் மையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கலந்தாய்வில் பணி நிரவலில் பணிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.


Next Story