புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி


புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி
x

மேலரசூர் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி, மே.22-

புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சப்பர பவனி நடைபெற்றது. முன்னதாக கூட்டுப்பாடல் திருப்பலியும், நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. அதன் பின் புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா, செபஸ்தியார் உருவம் தாங்கிய பெரியதேர் பவனி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2 சப்பரங்கள் வந்தன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் தேர், சப்பர பவனி நடைபெற்றது. அதன் பின் இரவு 7 மணி அளவில் அருட்தந்தை அடைக்கலராஜ் தலைமையில் ஆலயத்தில் நவநாள் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 8 மணியளவில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.


Next Story