புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர்பவனி


புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர்பவனி
x

புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவூர்:

விராலிமலை தாலுகா, வேலப்புடையான்பட்டி கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பங்கு தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு ஆலயத்தில் கீரனூர் மறைவட்ட அதிபரும் பங்கு தந்தையுமான அருளானந்தம் தலைமையிலான அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். இதைத் தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் மலர் மாலைகள், தோரணங்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித வனத்து அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று ஆலயத்தில் கொடி இறக்கம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. விழாவில் வேலப்புடையான்பட்டி, சித்தாம்பூர், கோட்டைகாரன்பட்டி, ஆலங்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலைப்புடையான்பட்டி கிராம கிறிஸ்தவ பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.


Next Story