புனித மிக்கேல் ஆலய தேர் பவனி


புனித மிக்கேல் ஆலய தேர் பவனி
x

பழனியில் புனித மிக்கேல் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனியில் உள்ள புனித மிக்கேல் ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு புனித மிக்கேல் மின்தேர் பவனி, நற்கருணை ஆசிர்வாத நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், பழனி பள்ளிவாசல் நிர்வாகி லியாகத் அலி ஆகியோர் கலந்துகொண்டு மின்தேர் பவனியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தேர் பவனியானது நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டான்லி ராபின்சன் தலைமையில் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story