கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து
ராயக்கோட்டை,:
தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் துளசிநகரை சேர்ந்த கூலி தொழிலாளி சாமுவேல் (வயது 26.). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெகன் (28,) மனைவி ரேணுகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த ஜெகன் பலமுறை கண்டித்துள்ளார். இதை சாமுவேல் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் நேற்று காலை கெலமங்கலம் ராஜலட்சுமி தியேட்டர் அருகே அமர்ந்திருந்த சாமுவேலை, தன்னுடைய நண்பர்கள் மூன்று பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த சாமுவேல் கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்கிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் சாமுவேல் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெகன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.