கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து


கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து
x

கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் ஆலயமணி (வயது 37), கூலித்தொழிலாளி. இவருடைய முதல் மனைவி குணாவதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு ஆலயமணி 2-வதாக ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆலயமணி மீது ரஞ்சிதாவின் அண்ணனான வி.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவப்பிரியன்ஸ் (34) என்பவருக்கு முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த முன்விரோதத்தை மனதில் வைத்திருந்த சிவப்பிரியன்ஸ், ஆலயமணியை தகாத வார்த்தையால் திட்டியதோடு பேனா கத்தியால் அவரது வலது கையில் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த ஆலயமணி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலயமணி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரியன்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story