மினி ஸ்டேடியம் அமைக்க ஏற்பாடு


மினி ஸ்டேடியம் அமைக்க ஏற்பாடு
x

மினி ஸ்டேடியம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்

தொண்டி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு இடத்தில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என 110 -விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தொண்டியில் செய்யது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மினி ஸ்டேடியம் இங்கு அமைப்பதற்கு அறிக்கை தயார் செய்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், துணைத் தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சாதிக் பாட்ஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story