அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் போராட்டம்


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் போராட்டம்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

அண்ணாமலைநகர்,

போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 170 தொகுப்பூதிய ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக ரூ.5 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை தொகுப்பூதிய ஊழியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அருகே சென்றனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது தொகுப்பூதிய ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோஷமிட்டனர். இதை தொடர்ந்து தொகுப்பூதிய ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்கள் கோரிக்கை அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்‌ என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.


Next Story