குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமலிங்கபுரம் பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிழக்குத்தெரு குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. ஆதலால் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன் மீண்டும் கழிவுநீர் தேங்காத வகையில் வாருகால் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story