மாநில எல்லைகளில் சோதனை தொடரும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு


மாநில எல்லைகளில் சோதனை தொடரும்:  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
x

பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

சென்னை,

தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் முடிந்துவிட்டதால், தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம். இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும்வரை, அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும்.

பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன. எனவே கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் என்ற உச்சவரம்பில் மாற்றம் கிடையாது. வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்" என்றார்.


Next Story