தூத்துக்குடியில் மாநில நகர கூட்டுறவு வங்கி இணைய மேலாண்மை இயக்குனர் ஆய்வு
தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில், மாநில நகர கூட்டுறவு வங்கி இணைய மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர வங்கி சேவையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேவைக்கு இணையாக சேவைபுரிவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக, சென்னை தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கி இணையத்தின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ஏ.கே.சிவமலர் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ச.லீ.சிவகாமி மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், நகர வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story