மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு


மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
x

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story