மாநில கபடி போட்டியில் வி.ஆர்.டி. அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை


மாநில கபடி போட்டியில்  வி.ஆர்.டி. அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை
x

மாநில கபடி போட்டியில் வி.ஆர்.டி. அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

அமெச்சூர் கபடி கழகம் சார்பில் திருப்பூரில் மாநில கபடி போட்டி நடந்தது. இதில் ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 அணிகள் பங்கேற்றது. இதில் வி..ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அப்துல் கலாம் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின. இதில் வி.ஆர்.டி. அரசு மேல்நிலைப் பள்ளி 32 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. சிறந்த விளையாட்டு வீராங்கனை கோப்பையை புவனேஸ்வரி வாங்கினார். சாதனை படைத்த மாணவிகளை தலைமை ஆசிரியர் பி.நந்தினி, உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

1 More update

Next Story