குமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில கேரம் போட்டிக்கு தகுதி


குமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில கேரம் போட்டிக்கு தகுதி
x
திருப்பூர்


அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சமீப காலங்களாக அரசுப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்தவகையில் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவிகள் நிவேதா, பானு ஆகியோர் திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயராகவன், சலுக்காமா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story