மாநில அளவிலான இறகு பந்து போட்டி


மாநில அளவிலான இறகு பந்து போட்டி
x

சிவகாசியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி மற்றும் சிவகாசி பைரோ டவுன் இன்னர்வீல் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான இறகுபந்து போட்டியை நேற்று நடத்தியது. எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியை கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, அருண் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக இன்னர்வீல் சங்க துணை திட்ட இயக்குனர் அர்ச்சனா கார்த்திக் வரவேற்று பேசினார். போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிவகாசி பைரோ சிட்டி ரோட்டரி சங்க தலைவர் மகேந்திரகுமார் பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை இன்னர்வீல் சங்க திட்ட இயக்குனர் ஜெயந்திகாமாக், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் இன்னர்வீல் சங்க தலைவி மாரீஸ்வரி நன்றி கூறினார்.

1 More update

Next Story