மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி


மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
x

அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

ராணிப்பேட்டை

தமிழ்நாடு கூடைப்பந்து அமைப்பு, அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, வேலூர் மாவட்ட கூடைப்பந்து அமைப்பு சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது.

இதில், தமிழ்நாடு கூடைப்பந்து அமைப்பின் தலைவர் ஆதவ்அர்ஜூனா, அன்னை மிரா பொறியியல், தொழில் நுட்ப கல்லூரியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ், கல்லூரியின் செயலாளரும், பொருளாளருமான தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கூடைப்பந்து அமைப்பின் துணைச்செயலாளர் அருள்வெங்கடேஷ், வேலூர் வேடரன்ஸ் கூடைப்பந்து அமைப்பின் தலைவர் விஜயநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், 24-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் பங்கேற்றனர். போட்டியின் தகுதிச்சுற்று, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட கூடைப்பந்து அமைப்பு தலைவர் கனகராஜ், செயலாளர் ஜெயசந்திரன், பொருளாளர் மற்றும் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த், கல்லூரி இயக்குனர் கிஷோர், முதல்வர் கோபிநாதன், துணை முதல்வர் சரவணன், நிர்வாக அதிகாரி சாண்டில்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story