மாநில விளையாட்டு போட்டி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சாதனை
கிருஷ்ணகிரி:
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் சார்பாக, மாநில அளவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் மற்றும் கேரம் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கிரிக்கெட் போட்டியில் ராபின்விசால் (கேப்டன்) தலைமையில் அங்கிட்சர்மா, அத்வைத், அர்ஜூன், துர்கேஷ், இளவரசன், லோகேந்தர், சூர்யா சசிகுமர், ஸ்பர்ஸ், தினேஷ், சங்கர்மகாதேவன், ஜெகதீர், யுவவிக்னேஷ், ஜீவன்குமார், சுகவனேஸ்வரன், அபிசக்திவேல் ஆகியோர் பங்கேற்று, முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இதேபோல் கேரம் விளையாட்டு போட்டியில், பிரித்யா ஸ்ரீ, லட்சுமிபிரியா, திவ்யா ஆகியோர் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கீதா பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், டாக்டர்கள் சரவணன், கேசவன், ஷர்மிளா ஆகியோர் பங்கேற்று, மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள். இதில் நிர்வாக அலுவலர் சரவணன், சக்திவேல், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.