மாநில அளவிலான வாள்வீச்சு போட்டி: காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை


மாநில அளவிலான வாள்வீச்சு போட்டி: காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை
x

காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

காஞ்சிபுரம்

மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் 9-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். வாள்வீச்சு போட்டி தனி நபர் பிரிவாகவும், 3 பேர் சேர்ந்த ஒரு குழுப் போட்டியாகவும் தனித்தனியாக நடைபெற்றன. காஞ்சீபுரம் மாநகராட்சி ராணி அண்ணாத்துரை மகளிர் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவிகளான ஜனனி, புவதர்ஷினி மற்றும் வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பூஜா ஆகியோர் ஒரே அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி மாநில அளவில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். இவர்களில் ஜனனி தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவி புவதர்ஷினி வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர காஞ்சீபுரம் நகராட்சி ராணி அண்ணாத்துரை மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி்களான ஆர்த்தி, பாவனா ஆகியோர் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.வெற்றி பெற்ற இவர்களுக்கு தமிழ்நாடு வாள்வீச்சு பிரிவு தொழில் நுட்ப பிரிவு இயக்குநர் ராஜன்பாபு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.


Next Story