மாநில அளவிலான கோ-கோ போட்டி: புதுக்கோட்டை அணிக்கு 15 வீராங்கனைகள் தேர்வு
மாநில அளவிலான கோ-கோ போட்டியில் புதுக்கோட்டை அணிக்கு 15 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
48-வது மாநில அளவிலான சீனியர் பெண்களுக்கான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி மன்னார்குடியில் நேற்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் புதுக்கோட்டை அணி சார்பில் 15 வீராங்கனைகள் தேர்வாகி பங்கேற்கின்றனர். இவர்களை போட்டிக்கு உடற்கல்வி ஆசிரியர்களான ராம்குமார் மற்றும் செல்வராஜன் ஆகியோர் நேற்று அழைத்து சென்றனர். வீராங்கனைகளுக்கு பயணம் மற்றும் உணவுக்கான நிதி மற்றும் விளையாட்டின் போது அவர்கள் அணியும் ஜெர்சி உள்ளிட்டவைகளை பொறியாளர் சையத் இப்ராஹிம் மற்றும் திமில் விளையாட்டு நிறுவனத்தின் விக்னேஷ் ஆகியோர் வழங்கினர்.
Related Tags :
Next Story