மாநில அளவிலான முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


மாநில அளவிலான முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Aug 2023 6:40 AM GMT (Updated: 12 Aug 2023 11:03 AM GMT)

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாநில அளவிலான முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட குளூர், நி.பஞ்சம்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம், மேல்மருவத்தூர் மற்றும் அரியனேந்தல் ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசுத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஆறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் மற்றும் கேடயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Next Story