கோபி அருகே மாநில அளவிலான செம்மைநெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டி; கோபி விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு


கோபி அருகே மாநில அளவிலான   செம்மைநெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டி;  கோபி விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு
x

கோபி அருகே மாநில அளவிலான செம்மை நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற கோபி விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

ஈரோடு

கோபி

கோபி அருகே மாநில அளவிலான செம்மை நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற கோபி விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு பரிசு

நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிக விளைச்சல் எடுக்கும் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசால் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த" டி.பி.எஸ்.5" ரக நெற்பயிர் விளைச்சல் அளவிடப்பட்டது.

இதில் ஒரு சதுர மீட்டரில் இருந்த நெல் குத்துகள், தூர்கள், கதிரில் இருந்த சராசரி நெல்மணிகள், வயலில் கிடைக்கப்பெற்ற நெல் விளைச்சல், நெற்பயிர் சாகுபடி செய்திருந்த பரப்பு ஆகிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ரூ.5 லட்சம் பாிசு

ஆய்வின் முடிவில் செம்மை நெல் சாகுபடியில் விவசாயி சிவகாமி அதிக விளைச்சல் எடுத்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் சிறப்பு பரிசு ரூ.5 லட்சம், வெள்ளிப் பதக்கம் மற்றும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது ஆகியவை வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று நடப்பு நிதியாண்டில், ஈரோடு மாவட்ட அளவில் முக்கிய பயிர்களில் போட்டியில் பங்கேற்கும் விவசாயிகளின் மகசூலை கணக்கீட்டு அதில் அதிகபட்ச மகசூல் எடுக்கும் முதல் விவசாயிக்கு ரூ.15 ஆயிரமும், அதற்கு அடுத்த மகசூல் பெரும் விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பயிர் விளைச்சல் போட்டிக்கான ஏற்பாடுகளை கோபி வேளாண்மை உதவி இயக்குனர் முரளி, வேளாண்மை அலுவலர்கள் சந்திரசேகரன், சிவப்பிரகாஷ், மற்றும் கோபி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

கூடுதல் விளைச்சல்

ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) அ.நே.ஆசைத்தம்பி, ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கு.முருகேசன், வேளாண்மை துணை இயக்குனர் ஆர்.சிவக்குமார், நாமக்கல் வேளாண்மை துணை இயக்குனர் அ.நாச்சிமுத்து, விவசாயிகள் பிரதிநிதி பாவனந்தம் ஆகியோர் போட்டிக்கு நடுவர்களாக பணியாற்றினார்கள்.

பாிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகாமி கூறுகையில் " டி.பி. எஸ். 5" ரக நெற்பயிரை நடப்பு பருவத்தில் முதன்முதலாக சாகுபடி செய்வதாகவும், இந்த ரகமானது மற்ற ரகங்களை காட்டிலும் கூடுதல் விளைச்சல் தருவதாகவும் தெரிவித்தார்.


Next Story