மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்


மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்
x

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை

குடுமியான்மலையில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில அளவிலான விளையாட்டு போட்டி இன்று தொடங்கியது. இதற்கு கல்லூரி முதன்மையர் நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி முதன்மையர் வேலாயுதம், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களின் அணி வகுப்புடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் விடாமுயற்சி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பெரியசாமி, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதனைதொடர்ந்து கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, மேசைப் பந்தாட்டம், நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 கல்லூரியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் நாள் முடிவில் 4 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற பின்னர் நீச்சல் போட்டிக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.


Next Story