தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி


தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி
x

ராஜபாளையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.

தலைமை பண்பு பயிற்சி

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 6 நாட்கள் தலைமை பண்பு பயிற்சி ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பம் கல்லூரியில் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் வரவேற்றார். பயிற்சியைத் தொடங்கி வைத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் குமார், பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் ஜெயக்குமார், கல்லூரி பொது மேலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கலையும் கல்வியும்

இப்பயிற்சியில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 202 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநில கருத்தாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்டங்களில் உள்ள ஏனைய தலைமை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியை அளிப்பார்கள். மாநிலத்தின் முதன்மை திட்டங்களும் தலைமை ஆசிரியர்களும், கலையும் கல்வியும், நூல் திறனாய்வு, குழந்தை உரிமைகள், கற்றல் கற்பித்தல் புதுமை, வாசிப்பை நேசிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு துறை வல்லுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் பள்ளி கல்வி தகவல் மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மை கோப்புகளை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.


Next Story