மாநில அளவிலான கைப்பந்து போட்டி


மாநில அளவிலான கைப்பந்து போட்டி
x

சோமுசமுத்திரம் கிராமத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. மற்றும் அச்சுவ் பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில் உலக சுற்று சூழல் தினம் மற்றும் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சோமசமுத்திரம் காலனியில் நடைபெற்றது. மாநில சுற்றுச் சூழல் பிரிவு துணை செயலாளர் வினேத் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ், ஒன்றியக் குழு தலைவர் அ.கலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 99 மரக்கன்றுகளை நட்டனர்.

மாநில அளவில் நடந்த போட்டியில் 40 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த அணிக்கு கோப்பை, ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் வகையில் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் செய்திருந்தார். நகர செயலாளர் கோபி, நகராட்சி துணைத் தலைவர் பழனி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அருண்ஆதி, அன்பரசு, மற்றும் நிர்வாகிகள், வாலிபால் அணியினர் கலந்து கொண்டனர்.


Next Story