அண்ணா பல்கலை.அருகே அப்துல்கலாமுக்கு சிலை


அண்ணா பல்கலை.அருகே அப்துல்கலாமுக்கு சிலை
x

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகே அப்துல்கலாமுக்கு சிலை அமைக்கப்படுகிறது என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலை. வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் இதுபற்றி பேசிய அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் அப்துல் கலாமின் திருவுருவச்சிலை அமைக்கப்படுவதாக அவர் கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு செப். மாத சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story