கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்


குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார், ஊடகவியலாளர் சுபைர் ஆகியோரை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்.‌ அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் முகம்மது இக்பால், துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக், ஷானவாஸ், ஏ.ஜே.உசேன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகம்மது ரபீக், செய்தி தொடர்பாளர் மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story