30 பன்றிகள் திருட்டு


30 பன்றிகள் திருட்டு
x

அறந்தாங்கி அருகே 30 பன்றிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

30 பன்றிகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆடலை கால வைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா மகன் குமார் (வயது 40). இவர் பல ஆண்டுகளாக பன்றி வளர்த்து வரும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர், 30 பன்றிகளை மேய்த்து விட்டு ஆடலை கண்மாய் உள்வாயிலில் அடைத்து வைத்து இருந்தார். மறுநாள் வந்து பார்க்கும் போது 30 பன்றிகளையும் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள இடங்களில் தேடி பார்த்தும் பன்றிகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து குமார் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்றிகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 30 பன்றிகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.


Next Story