பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
x

பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

இந்த விபத்து பற்றி கூறப்படுவதாவது:-

தீப்பிடித்தது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது.

இதனருகே உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களான பழைய சிலிண்டர்கள், கார் எஞ்சின், எந்திர உதிரி பாகங்கள், தார் மற்றும் பிளாஸ்டிக் எண்ணெய் கேன்களில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர், மற்றும் 3-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்கொண்டுவந்தனர்.இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இரும்பு பொருட்கள் எரிந்து நாசமாகியது.

இந்த தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா ?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே இரும்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

=========

பல்லடம் அருகில், இரும்பு உருக்காலையில் தீப்பிடித்து எரிந்த காட்சி.

Related Tags :
Next Story