'ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்க நடவடிக்கை' - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்


ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
x

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ரேஷன் கடைகளில் பால் விற்பனை செய்யப்படவில்லை. ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆவின் நிர்வாகத்தின் சில்லறை விற்பனையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது ஒரு கூடுதல் வியாபாரமாகவே இருக்கும்.

ஆவின் பால் பண்ணைகளில் பணிக்கு வரக்கூடிய பெண்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மனித விபத்துகளை தடுக்கும் வகையில் தானியங்கி இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story