24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை


24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 36 கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைகளின் மருந்தகங்களில் இருப்பில் உள்ள மருத்துகளை சரியாக பராமரிக்க வேண்டும். தீவனப்பயிர் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் 17.50 ஏக்கர் பரப்பளவில் தீவனப்பயிர் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களின் தற்போதைய நிலைகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசிகளை சரியான காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டும்.

கால்நடை மருத்துவமனை

மாவட்டத்தில் 24 மணிநேரம் செயல்படும் கால்நடை மருத்துவமனை, நடமாடும் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசிற்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவனீதகிருஷ்ணன், துணை இயக்குனர் ஸ்ரீஹரி, உதவி இயக்குனர் முரளி சதானந்தம் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story