திருட்டுப்போன ரூ.10 லட்சம் பொக்லின் எந்திரம் மீட்பு


திருட்டுப்போன ரூ.10 லட்சம் பொக்லின் எந்திரம் மீட்பு
x

கோட்டூர் அருகே திருட்டுப்போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொக்லின் எந்திரம் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

கோட்டூர் அருகே திருட்டுப்போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொக்லின் எந்திரம் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ெபாக்லின் எந்திரம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது35). கடந்த 13-ந்தேதி இவர் தட்டாங்கோவில் பகுதியில் அவருக்கு சொந்தமான பொக்லின் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை செய்து வந்தார். பின்னர் அதே இடத்தில் எந்திரத்தை விட்டு விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை எந்திரத்தை சென்று பார்த்தபோது மர்மநபர்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொக்லின் எந்திரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மன்னார்குடி துணை போலீ்ஸ் சூப்பிரண்டு அஸ்வத்ஆண்டோஆரோக்கியராஜ் மேற்பார்வையில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ்ட் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து பொக்லின் எந்திரத்தையும், திருடி சென்ற மர்மநபர்களையும் தேடிவந்தனர்.

4 பேர் கைது

மன்னார்குடி ஒன்றியம் காசாங்குளம் ஜெயசீலன் (43), கோட்டகச்சேரி செய்யது சம்சுல்குதா (26), கோவில்வெண்ணி விக்னேஷ் (30) ஆகியோர் பொக்லின் எந்திரத்தை திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து திருடப்பட்ட எந்திரம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த புரோக்கர் இலங்கேஸ்வரன் (48) என்பவரின் உதவியுடன் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து திருவிடைமருதூர் பகுதியில் மறைத்து வைத்திருந்த காணாமல் போன பொக்லின் எந்திரத்தை மீட்டு போலீசார் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை அறிந்த திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கோட்டூர் தனிப்படை போலீசாரை பாராட்டினார்.


Next Story