கிருஷ்ணகிரியில் அறநிலையத்துறை சார்பில்கோவில் நிலங்களை அளந்து கல்பதிக்கும் பணி தீவிரம்


கிருஷ்ணகிரியில் அறநிலையத்துறை சார்பில்கோவில் நிலங்களை அளந்து கல்பதிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 March 2023 7:00 PM GMT (Updated: 20 March 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளந்து கல் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவில் நிலங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்கவும், கோவிலுக்குரிய நிலங்களை அளவீடு செய்து கற்கள் பதிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி தாசில்தார் (ஆலய நிலங்கள்) திருமுருகன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் தேசிங்குராஜன், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், சர்வேயர்கள் அடங்கிய குழுவினர் கோவில் நிலங்களை அளவிட்டு கல் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தாசில்தார் திருமுருகன் கூறியதாவது:-

கல்பதிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அடுத்த புலியரசி திம்மராய சாமி கோவிலுக்கு சொந்தமான 2.48 ஏக்கர் நிலம், போலுப்பள்ளி தேடுகரகம் கோவிலுக்கு சொந்தமான 5.20 ஏக்கர் நிலம் மற்றும் போலுப்பள்ளி சாக்கியம்மன் கோவிலுக்கு சொந்தமான 8.16 ஏக்கர் கோவில் நிலங்கள் உள்பட மொத்தம் 15.84 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுகற்கள் பதிக்கும் பணிநடந்துள்ளது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் நிலங்களும் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகளை அகற்றி கல் பதிக்கும் பணி தொடர்ந்துநடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story