கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு
சேலம் அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசப்பட்டது. இதி்ல் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரமங்கலம்
சேலம் அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசப்பட்டது. இதி்ல் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புனே- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு செல்லும் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 16382) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில் நெய்க்காரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர். இதில் ெரயிலின் ஏ1 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் முறையிட்டனர்.
போலீசார் விசாரணை
அவர், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், சேலம் ரெயில்வே கோட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரெயில் இயக்கப்படும் நேரத்தில் காலதாமதம் எதுவும் ஏற்படவில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.