பெருஞ்சாணி அணையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்


பெருஞ்சாணி அணையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்
x

உள் வரத்து குைறந்ததால் பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியற்றம் நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

உள் வரத்து குைறந்ததால் பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியற்றம் நிறுத்தப்பட்டது.

அணையில் இருந்து...

குமரி மாவட்டத்தில் கனமழை நீடித்த வந்த நிலையில் பிரதான அணைகளான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை கட்டுப்பாடான அளவில் வைக்கும் வகையில் அணைகளின் மறுகால் மதகுகள் வழியாக உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மாவட்டத்தில் அணை பகுதிகளில் நேற்று மழையின் தீவிரம் தணிந்து சாரல் மழை மட்டுமே பெய்து வந்ததாலும் அணைகளின் நீர்மட்டம் கட்டுப்பாடான அளவிற்கு குறைந்ததாலும் அணைகளில் இருந்து வெளியேற்றப் படும் உபரி தண்ணீர் குறைக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை வரை வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில் காலை 11 மணி முதல் இந்த அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

உபரிநீர் திறப்பு நிறுத்தம்

மேலும் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1,364 கன அடி தண்ணீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரி தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. அதே வேளையில் அணையின் பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பாண்டியன் கால்வாயில் விடப்பட்டது.

எனினும் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.


Next Story