உப்பு உற்பத்தி பணிகள் நிறுத்தம்

உப்பு உற்பத்தி பணிகள் நிறுத்தம்
தஞ்சாவூர்
அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையினால் உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி தொழில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை மழையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை விரைவாக ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






