ரூ.50 லட்சத்தில் சேமிப்பு கிடங்கு


ரூ.50 லட்சத்தில் சேமிப்பு கிடங்கு
x

எரிச்சி அருகே சிதம்பர விடுதியில் ரூ.50 லட்சத்தில் சேமிப்பு கிடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், அறந்தாங்கி அடுத்த எரிச்சி அருகே சிதம்பர விடுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 250 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கினை சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் 192 எண்ணிக்கையிலான ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் மானிய விலையில் பவர் டில்லர் எந்திரங்களை வழங்கி, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட 6,746 விவசாயிகளுக்கு ரூ.6.63 கோடி மதிப்பிலான நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணியினை அவர் தொடங்கி வைத்தார். இதில் எரிச்சியில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பவர் டில்லர் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சி ரம்யா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளில், அப்துல்லா எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெபராஜ் உள்பட வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்த சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வந்தது.


Next Story