குற்றாலத்தில் ஸ்தோத்திர பண்டிகை
குற்றாலத்தில் ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது.
தென்காசி
சி.எஸ்.ஐ தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி மண்டலம் சார்பில் குற்றாலத்தில் உள்ள மறுரூப ஆலயத்தில் 79-வது ஸ்தோத்திர பண்டிகை கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தென்காசி, பாவூர்சத்திரம், புளியங்குடி, சாந்தபுரம், திப்- மீனாட்சிபுரம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, தென்காசி வடக்கு சீயோன் நகர், பாவூர்சத்திரம் மேற்கு, நெடும்பாறை, திப்பணம்பட்டி, வல்லம் ஆகிய 12 சேகரங்களின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் கலந்து கொண்டு ஆசீர்வாத செய்தி வழங்கினார். நிகழ்ச்சி நடைபெற்ற 3 நாட்களும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
Related Tags :
Next Story