மதுரை, மேலூரில் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்


மதுரை, மேலூரில் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
x

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை கண்டித்து மதுரை, மேலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

மதுரை

மதுரை,

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை கண்டித்து மதுரை, மேலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

என்.ஐ.ஏ. சோதனை

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் உள்பட நிர்வாகிகள் வீடுகளில் அத்துமீறி நுழைந்து சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பாக நெல்பேட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் தொகுப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

மாநில, மாவட்ட, துணை அமைப்பு, தோழமை கட்சியின் நிர்வாகிகள், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில துணைத்தலைவர் ரபீக் அக்மத், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் பிஸ்மில்லாக்கான், தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன், பார்வர்டு பிளாக் தேசிய துணைத்தலைவர் கதிரவன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் யூசுப் நன்றி கூறினார். இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.

மேலூர்

மேலூரில் உள்ள பெரியபள்ளி வாசல் முன்பு எஸ்.டி.பி.ஐ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.ஜியாவூதின் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் நிர்வாகிகளின் வீட்டில் அத்துமீறி சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷமிட்டனர்.


Related Tags :
Next Story