உடன்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


உடன்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில்எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள பேரூராட்சி திடலில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் துணைத்தலைவர் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். குலசேகரன்பட்டினம் கிளை செயலர் ஹாஜா வரவேற்றார். உடன்குடி நகர தலைவர் அப்துல்ஹமீது, நகர செயலர் சாகுல்ஹமீது, மாவட்ட அமைப்பு பொதுச்செயலர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்குத் தந்தை ஜான்பிரிட்டோ, மாநில விவசாய அணி தலைவர் ஷேக் அப்துல்லா, கிறிஸ்தியாநகரம் சேகர தலைவர் சுந்தர்சிங் ஐசக்ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமது உமர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story