எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 6:30 AM IST (Updated: 24 July 2023 6:31 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை, நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடத்தில் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார்.

மாநில செயலாளர் ராஜாஉசேன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- திருபவுனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் கவனத்தை திசை திருப்பவும், பழிவாங்குவதற்காகவும் திட்டமிட்டு நடத்தப்படுகிற சோதனையாகும். எங்கள் கட்சிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த சோதனையை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அப்துல் கரீம், அப்பாஸ், சுகி.கலையரசன் உள்பட ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story