எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
தமிழகத்தில் 24 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனை நடத்தினர். இதில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முஹமது ரபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஹமது ரவூப் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் ஷாகுல்ஹமீது பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் முஹமது ரபீக், தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முகமது சபீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் பைசல் ரஹ்மான் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story