எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
மத்திய அரசின் என்.ஐ.ஏ. அமைப்பு தமிழகத்தில் நடத்திய சோதனையில் பல்வேறு முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து நேற்று கும்பகோணத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி. ஐ.கட்சியை சேர்ந்த குடந்தை இப்ராஹிம் தலைமை தாங்கினார். ஐ.என்.டி. மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் கைது ெசய்தனர்.
Related Tags :
Next Story