எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாகை புதிய பஸ் நிலையத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கள்ளர் மொய்தீன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், விமன் இந்தியா முஸ்லிம் முன்னணி மாவட்ட பொது செயலாளர் நஸ்ரின் பேகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நகரத் தலைவர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.


Next Story