கம்பம் பள்ளத்தாக்கு கடைமடையில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வைக்கோல்


கம்பம் பள்ளத்தாக்கு கடைமடையில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வைக்கோல்
x
தினத்தந்தி 26 April 2023 9:00 PM GMT (Updated: 26 April 2023 9:00 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் இருந்து வைக்கோல் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியான குச்சனூர் அருகே கூழையனூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தில் இருபோக நெல் சாகுபடி செய்வது வழக்கம். இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பாசிப்பயறு, தட்டை பயறு போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடைமடை பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் கடந்த சில ஆண்டுகளாக எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அறுவடை மூலம் கிடைத்த வைக்கோல் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த வைக்கோலை சில விவசாயிகள் தங்களது கால்நடை தீவனத்திற்காக வைத்துக்கொள்கிறார்கள். சில விவசாயிகள் அவற்றை வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்புகிறார்கள். அந்த வகையில் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து வைக்கோல் எந்திரங்கள் மூலம் கட்டுகளாக கட்டி, லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ.250 வரை விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story